ராஜபக்ஷ சகோதரர்கள் வெளிநாடு செல்வதற்கான தடை நீடிப்பு

🕔 August 3, 2022

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்க உச்ச நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டுள்ளது.

ராஜபக்ச சகோதரர்களுக்கு முதலில் ஜூலை 15ஆம் திகதி வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டு, பின்னர் அது நீட்டிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அரசியல்வாதிகளுக்கும் எதிராக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா மற்றும் மூன்று பேர் தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை அடுத்து, பயணத்தடை நீடிக்கப்பட்டது.

அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் டபிள்யூ.டி. லக்ஷ்மன், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட 06 பிரதிவாதிகளின் வெளிநாட்டுப் பயணத்தை தடை செய்யுமாறு கோரி கடந்த ஜூன் மாதம் 17ஆம் திகதி பொதுநல மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

குறிப்பிடப்பட்டுள்ள பிரதிவாதிகள் இலங்கையின் வெளிநாட்டுக் கடனின் நிலைத் தன்மையின்மை, வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் உள்ள கடினத் தவறு மற்றும் தற்போதைய பொருளாதாரத்தின் நிலை ஆகியவற்றிற்கு நேரடியாகப் பொறுப்புடையவர்கள் என, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்