பாசிச புலிகளின் நர வேட்டைக்கு, காத்தான்குடி பள்ளிவாசல்களில் பலியான ‘சுஹதா’க்கள் தினம் இன்றாகும்

🕔 August 3, 2022

– மரைக்கார் –

காத்தான்குடி பள்ளிவாசல்களில் – பாசிச விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களை நினைவுசூகூரும் சுஹதாக்கள் தினம் இன்றாகும்.

1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 03ஆம் திகதி – காத்தான்குடியிலுள்ள ஹுசைனியா பள்ளிவாசல் மற்றும் மீரா ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது ரத்தவெறி கொண்ட விடுதலைப் புலிகள் துப்பாக்கியால் சுட்டும் கைக்குண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதலில் சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் முதியோர் என 124 பேர் பலியானார்கள்.

பள்ளிவாசலில் நடந்த தாக்குதலில் 103 பேரும், காயப்பட்ட 21 பேர் பின்னரும் மரணித்தனர்.

அந்த வகையில் இன்று 32ஆவது சுஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

முஸ்லிம்களை இவ்வாறு புலிகள் படுகொலை செய்தமை தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது, முஸ்லிம் சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

தமிழர்களின் இன விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிய புலிகள், சக சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை நர வேட்டையாடியமை – அவர்களின் போராட்ட வரலாற்றில் இழிவான பக்கங்களாகும்.

புலிகளின் முடிவு நந்திக் கடல் பகுதியில் அருவருப்பாக அமைவதற்கு, அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக துப்பாக்கிகளை நீட்டியமை மிக முக்கியமான காரணமாகும் என்பதை, இன்றைய சுஹதாக்கள் தினத்தில் அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்