கோட்டாவுக்கு எந்தவித சலுகைகளும் சிங்கப்பூர் வழங்கவில்லை: அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு

🕔 August 2, 2022

லங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் தங்கியுள்ள நிலையில், அவருக்கு எந்தவித சலுகைகளோ அல்லது விருந்தோம்பலோ வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஜூலை 13 அன்று மாலைதீவுக்குத் தப்பிச் சென்று, அடுத்த நாள் சிங்கப்பூர் சென்றடைந்தார்.

நாட்டில் ஏற்பட்ட மக்கள் போட்டத்துக்கு அஞ்சி – அவர் இவ்வாறு தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

73 வயதான கோட்டா – தனது ராஜினாமா கடிதத்தை ஜூலை 14 அன்று சபாநாயகருக்கு சிங்கப்பூர் இருந்தவாறு மின்னஞ்சலில் அனுப்பினார்.

“பொதுவாக, சிங்கப்பூர் அரசாங்கம் – முன்னாள் அரச தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்களுக்கு சலுகைகள், விலக்கு மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை வழங்குவதில்லை” என்று, திங்களன்று நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கையில் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூரில் தங்குவதற்கு முதலில் 14 நாட்களுக்கான வீஸா வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் 14 நாட்களுக்கு அந்த வீஸா நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்