வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனம் இறக்குமதி செய்ய அனுமதி

🕔 August 2, 2022

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் அமெரிக்க டொலர் தொகையின் அடிப்படையில், மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ வழிகளில் இலங்கைக்கு அனுப்பப்படும் தொகையின் அடிப்படையில், வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கைத் தொழிலாளர்களுக்கு, கூடுதல் கடமைச் சலுகை கொடுப்பனவை வழங்குவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3000 அமெரிக்க டொலர்களை இலங்கையின் வங்கிக் கணக்குக்கு மாற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளிக்கு மின்சார மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

20,0000 அமெரிக்க டொலர்களுக்கு மேல் பணப்பரிமாற்றம் செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மின்சார காரை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்