கோட்டாவின் கடவுச்சீட்டுக்கு முத்திரையிடாத அதிகாரிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும்: டயனா

🕔 July 28, 2022

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது – அவரின் கடவுச்சீட்டை முத்திரையிடாத குடிவரவு – குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இனங்காணப்பட்டு உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்தார்.

நேற்று (27) அவசரகால நிலை நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு பேசியபோது அவர் இதனைக் கூறினார். 

“டலஸ் அழகப்பெரும ஜனாதிபதியானால், சஜித் பிரேமதாச பிரதமரானால் அரசாங்கம் நன்றாக இருக்குமா? பரிதாபமாக இருக்குமல்லவா?” என அவர் கேள்வியெழுப்பினார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு அப்போதைய ஜனாதிபதி என்ற வகையில் ராஜதந்திர உரிமைகள் இருந்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போது – அவரின் கடவுச்சீட்டை முத்திரையிடாத குடிவரவு அதிகாரிகள் உடனடியாக இனங்காணப்பட்டு உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் இத்தகைய நடத்தைக்கான காரணங்களை அறிந்து கொள்வது அவசியம். அவர்கள் சட்டத்தை கையிலெடுத்துள்ளனர். கடமையை தவறியுள்ளனர் என்றும் அவர் இங்கு தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்