
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை நீதிமன்று நீடித்துள்ளது.
குறித்த இருவருக்குமான பயணத்தடையை ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி வரை நீடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் என – குறித்த இருவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது.
தொடர்பான செய்தி: மஹிந்த, பசில் நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள்: அவர்களின் சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றுக்கு அறிவிப்பு



