24 மணிநேர சேவையினை வழங்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் நிலையங்கள், அவ்வாறு செயற்படுவதில்லை என மக்கள் புகார்

🕔 July 27, 2022

– அஹமட் –

லங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பும் சில நிலையங்கள், அவை வழங்க வேண்டிய சேவைக் காலத்தை புறக்கணித்து செயற்படுவதாக தெரியவருகின்றது.

24 மணி நேர சேவையினை வழங்கும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ள சில எரிபொருள் நிரம்பும் நிலையங்கள், அவ்வாறு இயங்காமல் – இரவு 08 மணியுடன் தமது சேவையினை முடித்துக் கொள்வதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தற்போது மக்கள் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு பெரும் நெருக்கடிகளை சந்திக்கும் நிலையில், 24 மணிநேர சேவையினை வழங்க வேண்டிய எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் அவ்வாறு இயங்காமல் – மக்களையும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினையும் ஏமாற்றி வருவதாக அறிய முடிகிறது.

இதேவேளை எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் – சில நிபந்தனைகளை கட்டாயம் பூர்த்தி செய்திருக்க வேண்டிய நிலையில், கணிசமானளவு எரிபொருள் நிலையங்கள் அவற்றினை நிறைவேற்றுவதில்லை எனவும் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

உதாரணமாக மின்சாரம் தடைப்படும் போது, எரிபொருள் நிலையங்களில் மின்பிறப்பாக்கியினைப் (ஜெனரேட்டர்கள்) பயன்படுத்தி, எரிபொருள்கள் விநியோகிக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

ஆனால், அநேகமான எரிபொருள் நிலையங்களில் மின்சாரம் தடைப்பட்டால் – ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுவதில்லை.

இது குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அந்தந்த பிராந்திய அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு மக்கள் முறையிடலாம். அதற்கான தொலைபேசி இலக்கங்களை அடைப்புக் குறிக்குள் இருக்கும் ‘லின்க்’கை அழுத்துவன் மூலம் பெறலாம். (பிராந்திய அலுவலகங்களின் தொடர்பிலக்கங்கள்).

இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ், 24 மணிநேர சேவையினை வழங்கும் வகையில் பதிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரம்பும் நிலையங்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள, அடைப்புக் குறிக்குள் இருக்கும் ‘லின்க்’கை அழுத்தலாம். (24 மணிநேர சேவையினை வழங்க வேண்டிய எதிபொருள் நிரப்பும் நிலையங்கள்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்