கோட்டாவுக்கான வீஸாவை மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூர் நீடித்தது

🕔 July 27, 2022

சிங்கப்பூரில் தங்கியுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கான வீஸா மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் சென்றிருந்த கோட்டாபய ராஜபக்ஷ, அங்கிருந்தபடி ஜனாதிபதி பதவியை ராஜிநாமா செய்தார்.

இலங்கையில் ஏற்பட்ட மக்கள் போராட்டத்தையடுத்து நாட்டிலிருந்து வெளியேறிய கோட்டா, மாலைதீவு சென்று – அங்கிருந்து சிங்கப்பூர் பயணமானார்.

இதன்போது அவருக்கு 14 நாட்களுக்கான குறுகிய கால வீஸாவினை சிங்கப்பூர் வழங்கியிருந்தது.

இந்த நிலையில் கோட்டாவை கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்ட மா அதிபருக்கு சர்வதேச அமைப்பு ஒன்றின் சட்டத் தரணிகள் புகார் ஒன்றினை அனுப்பியிருந்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவார் என, நேற்று அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, கோட்டாவுக்குக்கான வீஸாவை சிங்கப்பூர் அரசாங்கம் மேலும் 14 நாட்களுக்கு நீடித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்