பொதுமக்கள் ஆதங்கம்: நிந்தவூரில் முடியுமென்றால், ஏன் அட்டாளைச்சேனையில் முடியாது?

🕔 July 26, 2022

– ஜௌபர் அஸாயிம் (அட்டாளைச்சேனை) –

நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் தாஹிருக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்துக்கு அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அதிபர் ஒருவர் பெற்றோல் நிரப்பச் சென்றிருந்தார். அங்கு வரிசையில் நின்றிருந்த ஒரு சில நிந்தவூர் அதிபர்கள் விசேடமாக முன்னுரிமைப்படுத்தப்பட்டு அழைக்கப்பட்டு பெற்றோல் நிரப்பப்பட்டதை அட்டாளைச்சேனை அதிபர் அவதானித்தார்.

அந்த வரிசையில் ஆட்டோக்காரர்கள், பொதுமக்களுடைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் எரிபொருள் நிலைய உரிமையாளர் தவிசாளர் தாஹிருடைய அறிவுறுத்தலில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அதிபருக்கும் பெற்றோல் நிரப்பப்பட்டது.

எமதூர் அட்டாளைச்சேனையில் இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இருக்கின்றன. இந்த எரிபொருள் நிலைய உரிமையாளர்களும் மனிதாபிமானத்துடனும் சமூக நோக்குடனும் இந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றினால், எமதூரின் கல்விக்குப் பாடுபடும் கோட்டக் கல்விப் பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள் – நமது பாடசாலைப் பிள்ளைகளுக்கு கற்பித்தல் பணியை தற்போதைய நெருக்கடியான காலத்தில் சிறப்பாக முன்னெடுப்பர் என்பதை மற்றவர்களாவது அவர்களுக்குப் புரிய வைத்தால் நல்லது.

எமது கோட்டக்கல்விப் பணிப்பாளர் – இன்று ஆலங்குளம் பாடசாலைக்கு சைக்கிளில் சென்று, பாடசாலை அவதானிப்பை நிறைவேற்றியதை பலரும் அறிந்திருப்பார்கள்.

கோட்டக்கல்வி பணிப்பாளர் சைக்கிளில் சென்ற தூரத்தையாவது சற்று மனிதாபிமான அடிப்படையில் சிந்திக்கவேண்டும்.

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று வருகின்றனர்.

சில எரிபொருள் நிலையங்களில் பெற்றோல் நிரப்பச் செல்வதை விடவும், சைக்கிளில் செல்வது உத்தமமானது.

“கற்றாரைக் கற்றாரே நேசிப்பர்” என்பது அநேகமான இடங்களில் முயற்கொம்பாகவே உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்