அரச நிறுவனங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்

🕔 July 26, 2022

ரச நிறுவனங்கள் சிலவற்றுக்கு புதிய அதிகாரிகளை நியமித்துள்ளதாக அமைச்சரவை இன்று (26) அறிவித்துள்ளது.

அதன்படி

  • உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகமாக டி.ஆர்.எஸ். ஹப்புஆராச்சி
  • திறைசேரியின் பிரதிச் செயலாளராக டப்ளியூ.ஏ. சத்குமார
  • இலங்கை சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பி.பி.எஸ்.சி. நொனிஸ்
  • தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக ஜூட் நிலூஷன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட நியமனங்களுக்கு நேற்று மாலை கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Comments