17 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுதியுடைய கஞ்சா, காரைநகரில் சிக்கியது

🕔 July 20, 2022

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் கடத்தப்பட்ட பெருமளவு கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று (19) இரவு டிங்கி படகு ஒன்றில் குறித்த தொகை கஞ்சா கடத்தப்பட்டபோது, கடற்படையினர் இதனை கைப்பற்றியதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்கள் மாதகல் பகுதியைச் சேர்ந்த 42 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா 172 மில்லியன் ரூபா பெறுமதியுடையது எனவும் கடற்படை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments