தலைப்புச் செய்திகள்

புதிய ஜனாதிபதியாக ரணில் தெரிவானார்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிஙக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (20) நடந்த வாக்கெடுப்பில் வெற்றிபெற்றதை அடுத்து, அவர் ஜனாதிபதியாக வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று நாடாளுமன்றில் நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளைப் பெற்றார்.

இதேவேளை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட டலஸ் அலகபெரும 82 வாக்குகளையும், அனுர குமார திஸாநாயக 03 வாக்குகளையும் பெற்றனர்.

ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ, கடந்த 14ஆம் திகதியன்று அவரின் பதவியை ராஜிநாமா செய்தார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடயத்துக்கு புதிய ஜனாதிபதியொருவரை அரசியலமைப்பின் பிரகாரம் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றின் மூலம் தெரிவு செய்யும்பொருட்டு இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

நாடாளுமன்ற வாக்கெடுப்பின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்பட்டமை இது இலங்கை வரலாற்றில் முதல் தடவையாகும்.

இதனடிப்படையில் இலங்கையின் 08ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் பதவிக்கு வந்துள்ளார்.