தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதி தெரிவில் யாருக்கு ஆதரவு: தீர்மானத்தை அறிவித்தது சுதந்திரக் கட்சி

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமது கட்சி யாருக்கும் வாக்களிக்கப் போவதில்லை என சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

மேலும் ஜனாதிபதி போட்டியில் களமிறங்குவோர் தமது எதிர்கால செயல் திட்டம் குறித்து அறிவிக்க வேண்டும் எனவும் சுதந்திரக் கட்சி குறிப்பிட்டிருந்தது.