தலைப்புச் செய்திகள்

நிரப்பும் நிலையங்களுக்கு, இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகம் இல்லை: லங்கா ஐஒசி தீர்மானம்

லங்கா இந்தியன் ஒயில் (ஐஓசி) நிறுவனம், தமது எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு இன்றும் நாளையும் எரிபொருள்களை வழங்குவதை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.

அடுத்த இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள போராட்டங்களை முன்னிட்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

திட்டமிடப்பட்டுள்ள போராட்டங்களை கருத்தில் கொண்டு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு விநியோக நடவடிக்கைகளை நிறுத்துமாறு நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, லங்கா ஐஒசி நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா கூறுயுள்ளார்.

இருந்தபோதிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கும் அதன் பெறுமதிமிக்க தொழிற்சாலைகளுக்கும் திருகோணமலையில் இருந்து எரிபொருள் விநியோகிப்பதைத் லங்கா ஐஒசி தொடரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.