தலைப்புச் செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்கள் களனியிலிருந்து கொழும்பு நுழைந்தனர்: நாளைய போராட்டத்துக்கு தயார்

பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (08) களனியில் இருந்து கொழும்பு வரை எதிர்ப்பு பேரணி ஒன்றை நடத்தினர்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இந்த பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

நாளை (சனிக்கிழமை) காலி முகத்திடலில் நடைபெறவுள்ள பெரும் போராட்டங்களுக்குத் தயாராகும் வகையில் இவர்கள் கொழும்புவுக்குள் நுழைந்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், நாளை காலி முகத்திடலில் பெரும் முன்னெடுப்பிலான போராட்டம் நடைபெறவுள்ளது.

தொடர்பான செய்தி: கறுவாத்தோட்ட பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு