
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக நாளை (09) நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பதவி விலகல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அமைதிப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதையும் வன்முறைச் சம்பவங்களைத் தவிர்ப்பதையும் உறுதிசெய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
போராட்டங்களின் போது மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு பொலிஸார் மற்றும் பிற பாதுகாப்புப் படையினருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை வகிக்கும் – ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜயவர்த்தன கையொப்பத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர பதவி விலகுமாறு வலியுறுத்தியே நாளைய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




