கோட்டா கோ ஹோம்; எதிரணி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்: நாடாளுமன்றிலிருந்து வெளியேறினார் ஜனாதிபதி

🕔 July 5, 2022

னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (05) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்ட நிலையில், அவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தமையை அடுத்து, அவர் சபையிலிருந்து வெளியேறினார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்றைய தினம் ஜனாதிபதி கலந்து கொண்ட நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் உரையாற்றினார்.

இதன்போது எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் “கோட்டா கோ ஹோம்” என கோஷமெழுப்பியதோடு, அவ்வாறு எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இதன் காரணமாக பிரதமரின் உரைக்கு தொடர்ச்சியாக இடையூறு ஏற்பட்டது.

இந்த அமளிதுமளி காரணமாக ஜனாதிபதி சபையை விட்டும் வெளியேறினார்.

எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்துக்கு இடையில், சபையை 10 நிமிடங்கள் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

சபையிலிருந்து வெளியேறும் கோட்டா

Comments