உள்ளூராட்சி மன்ற தேர்தல்; செப்டம்பர் 20க்கு பின்னர் நடத்தும் அதிகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

🕔 July 4, 2022

ள்ளூராட்சி மன்ற தேர்தலை 2022 செப்டெம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் நடத்துவதற்கான அதிகாரம் தமக்கு வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி அதிகார சபைகளின் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.

செப்டம்பர் 20ஆம் திகதிக்குப் பிறகு – அரசியல் கட்சிகளுடன் ஆணைக்குழு ஆலோசித்து, உள்ளாட்சி தேர்தலுக்கான திகதிகளை அறிவிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலத்தையும் 2023 மார்ச் வரை ஒரு வருடத்துக்கு நீடிக்க பொறுப்புவாய்ந்த அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments