எரிபொருள் நிலையத்தில் ராணுவ அதிகாரி, பொதுமகன் ஒருவரை உதைக்கும் வீடியோ: சமூக ஊடகங்களில் வைரல்

🕔 July 4, 2022

ரிபொருள் நிரப்பு நிலையத்தில் ராணுவ அதிகாரி ஒருவர், நபர் ஒருவரை உதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த மற்றொரு நபர் படம் பிடித்துள்ளார்.

வீடியோவில், சிரேஷ்ட ராணுவ அதிகாரி ஒருவர் நெருங்கி கிக் பொக்ஸிங் பாணியில் தாக்குதல் நடத்துகிறார். அதற்கு முன்பு அந்த நபரை ராணுவத்தினர் பிடித்து வைத்திருப்பதைக் காண முடிகிறது.

அப்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்.

தாக்குதல் நடத்திய ராணுவ அதிகாரி கூட்டத்தில் இருந்து மற்றொரு நபரை அழைத்து அவருடன் மோசமான வார்த்தைகளால் திட்டுவதையும் வீடியோவில் மேலும் காணலாம்.

எரிபொருள் நிலைய கூட்டத்தில் இருந்த மற்றொரு நபரையும் அவர் எச்சரிப்பதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ராணுவத்தினரும் பொலிஸாரும் தனிநபர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்கள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளன.

சில சம்பவங்கள் மொபைல் போன்களில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

வீடியோ

Comments