கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி உயிரிழந்தமை தொடர்பில், படையினர் நால்வர் கைது

🕔 July 2, 2022

ந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ராணுவத்தின் சார்ஜன்ட் தரத்தைச் சேர்ந்த இருவரும், விமானப்படையை உத்தியோகத்தர்கள் இருவருமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நபர்கள் கந்தக்காடு நிலையத்தில் ஆலோசகர்களாக பணியாற்றுவோர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (28) கைதி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் அடுத்து, சுமார் 679 கைதிகள் தப்பியோடினர். பின்னர் போலிசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தப்பிச் சென்றவர்களில் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் 44 பேர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

இந்த முகாமில் மொத்தமாக 998 பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

Comments