நாடு முழுவதும் வீதிகளில் வாகனங்களை நிறுத்தி வைக்கும் போராட்டத்துக்கு அழைப்பு

🕔 June 28, 2022

நாட்டில் நாளை (29) புதன்கிழமை வீதிகளில் வாகனங்களை நிறுத்தி வைக்கும் போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணி தொடக்கம் மாலை 3.00 மணிவரை இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளதாக, அது குறித்து அழைப்பு விடுத்து வெளியிடப்பட்டுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த போராட்டம் குறித்து இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் – தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் தத்தமது வாகனங்களை வீதிகளில் நிறுத்தி வைத்து விட்டு, வருமாறு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ள செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் போது இலங்கையிலுள்ள அமெரிக்கப் பிரஜைகள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டுமெனவும், அமெரிக்கத் தூதரகம் அறிவுத்தல் வழங்கியுள்ளது.

அமெரிக்க தூதரகத்தின் அறிவுறுத்தல்

Comments