கட்டார் எரிசக்தி அமைச்சருடன், காஞ்சன பேச்சுவார்த்தை

🕔 June 28, 2022

ட்டாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, அந்நாட்டின் எரிசக்தி விவகார ராஜாங்க அமைச்சர் சாட் ஷெரிடா அல் காபியை இன்று (28) சந்தித்தார்.

அரசுடைமையான கட்டார் எனர்ஜி மற்றும் கட்டார் அபிவிருத்தி நிதியத்தின் உதவியுடன், இலங்கை எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு பெற்றோலிய உற்பத்திகள், இயற்கை திரவ எரிவாயு (LNG) மற்றும் திரவ பெற்றோலிய எரிவாயு (LPG) என்பவற்றை பெற்றுக் கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையின் எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான உதவிகளை பெறும் நோக்கில் மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோர் நேற்று கட்டார் நோக்கி பயணமாகினர்.

Comments