எரிபொருள் விலை இன்று அதிகரிக்கப்பட்டமையை அடுத்து, உணவுப் பொருட்களுக்கான விலைகளும் உயர்வு

🕔 June 26, 2022

ணவு பொதியொன்றின் விலை மற்றும் ஏனைய அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் இன்று (26) முதல் அமுலாகும் வகையில், அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி 10 சதவீதத்தால் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருட்களுக்கான விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று அதிகாலை அதிகரித்தமையைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பஸ் கட்டணத்தின் ஆரம்ப விலையை 40 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர்கச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று எரிபொருட் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து, புதிய விலைகள் வருமாறு;

பெற்றோல் (ஒக்டேன் 92) – 470 ரூபா
பெற்றோல் (ஒக்டேன் 95) – 550 ரூபா
ஓட்டோ டீசல் – 460 ரூபா
சுப்பர் டீசல் – 520. ரூபா

Comments