தம்மிக பெரேரா அமைச்சராக சத்தியப் பிரமாணம்

🕔 June 24, 2022

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா இன்று (24) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அவர் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

இலங்கை வர்த்தகர் தம்மிக நேற்று புதன்கிழமை (22) நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினராக இருந்த பஸில் ராஜபக்ஷ ராஜிநாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, தம்மிக பெரேரா நியமிக்கப்பட்டார்.

Comments