வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப் பெண்களாக செல்வதற்கான வயதில் திருத்தம்: அமைச்சரவை தீர்மானம்

🕔 June 21, 2022

லங்கைப் பெண்கள் – வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களுகளாகச் செல்வதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக திருத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தற்போது, இலங்கைப் பெண்கள் – வீட்டுப் பணியாளர்களாக சஊதி அரேபியாவில் பணிபுரிய குறைந்தபட்ச வயது 25 வயதும், மத்திய கிழக்கு நாடுகளில் பணி புரிவதற்கு 23 வயதும், மற்ற நாடுகளில் 21 வயதும் நிரம்பியவராக இருக்க வேண்டும்.

இந்த நிலையில், இலங்கை பெண்கள் – வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்வதற்கான குறைந்தபட்ச வயதை திருத்துவதற்குரிய யோசனையை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

இது தொடர்பில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்காக நீதி அமைச்சரின் கீழ் அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இலங்கைப் பெண்கள் – வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்வதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக மாற்றியமைக்க அமைச்சரவை உபகுழு பரிந்துரை செய்துள்ளது.

குறித்த திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்