சனத் நிஷாந்த எம்.பியின் சகோதரர், நபரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது

🕔 June 20, 2022

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினருமான ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆராச்சிக்கட்டுவவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரைத் தாக்கியமை மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜகத் சமந்த – எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அருகில் நபர் ஒருவரைத் தாக்கியமையைக் காட்டும் வீடியோ – சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தின் சிசிடிவி கமெராவில் பதிவான இந்த சம்பவம் இம்மாதம் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளராக இருந்த ஜகத் சமந்த, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர்களை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குள்ளானவர் வைத்தியசாலையில் பின்னர் அனுமதிக்கப்பட்டார்.

Comments