‘அங்கம்பொர’ தற்காப்புக் கலைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க, அமைச்சரவை அனுமதி

🕔 June 14, 2022

லங்கையின் பாரம்பரிய தற்காப்புக் கலைகளில் ஒன்றான ‘அங்கம்பொர’வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க, அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இலங்கையின் பாரம்பரிய விளையாட்டாகவும், தற்காப்புக் கலையாகவும், கலாச்சார மரபுரிமையாகவும் காணப்படுகின்ற ‘அங்கம்பொர’ (உடற் போர்) தற்காப்புக் கலையை மேம்படுத்துவதற்கு விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

‘அங்கம்பொர’ (உடற் போர்) தற்காப்புக் கலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்காக 2019 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பினும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படவில்லை.

அதனால், ‘அங்கம்பொர’ (உடற் போர்) தற்காப்புக் கலையைப் பாதுகாத்து மேம்படுத்தும் நோக்கில், ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியாளர்களால் விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்காக, விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச வம்சத்தினர் கற்கும் கலையாக ‘அங்கம்பொர’ தற்காப்புக் கலை இருந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்