அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு ‘ஆவி பிடிக்கும் சாதனம்’: சொந்த நிதியிலிருந்து நபீல் அன்பளிப்பு

🕔 June 14, 2022

– அஹமட் –

ட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு தேவையாக இருந்த ‘ஆவி பிடிக்கும் சாதனம்’ (Nebulizer) ஒன்றினை, மக்கள் வங்கியின் அட்டாளைச்சேனை கிளையினுடைய வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. நபீல், தனது சொந்த நிதியிலிருந்து அண்மையில் அன்பளிப்புச் செய்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைப் பொறுப்பதிகாரி டொக்டர் யூ.எல்.எம். வபா விடம், குறித்த சாதனம் கையளிக்கப்பட்டது.

பல்வேறு தேவைகள் மற்றும் குறைபாடுகளுடன் இயங்கி வரும் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு ECG Recorder மற்றும் Multi para monitor ஆகிய சாதனங்களும் அவசரத் தேவையாக உள்ளன.

இவற்றினை அன்பளிப்பாக வழங்குவதற்கு ஆர்வமுள்ளோர் வைத்தியசாலை நிர்வாகத்தினரை தொடர்பு கொள்ள முடியும்.

இந்த வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு குளிசைகளை வைத்து வழங்குவதற்கான உறைகள் (பக்கட்) இல்லாமையினால், கடதாசிகளில் சுற்றப்பட்டு குளிசைகள் வழங்கப்படுகின்றன.

எனவே, குளிசை உறைகளை (பக்கட்) அன்பளிப்பாக வழங்குமாறும் ஆர்வமுள்ளோரிடம் வைத்தியசாலை நிருவாகம் வேண்டுகோள் விடுகின்றது.

Comments