கஞ்சா கலந்த ‘மதன மோதக’; இளைஞர்கள் மத்தியில் பரவுகிறது: ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் எச்சரிக்கிறார்

🕔 June 13, 2022

துபானங்களுக்கு மாற்றாக கஞ்சா கலந்த, பாலுணர்வை தூண்டும் பதார்த்தமொன்றினை இளைஞர்கள் பயன்படுத்துவது ஆபத்தான போக்காக மாறி வருவதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரும் உள ஆரோக்கிய அறக்கட்டளையின் தலைவருமான ஞானதாஸ பெரேரா கூறியுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் விலைவாசி உயர்ந்து வருவதால், விலை குறைவான இந்த போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

‘மதன மோதக’ எனும் கஞ்சா கலந்த பாலுணர்வைத் தூண்டும் மலிவு போதைப்பொருளை உட்கொள்ளும் போக்கு, இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வருவதாக, அவர் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக பல மடங்காக மதுபானங்களின் விலையேற்றம் அதிகரித்துள்ளமை காரணமாக இளைஞர்கள், குறிப்பாக பாடசாலைகளின் சிரேஷ்ட மாணவர்கள், மதுபானங்களுக்கு பதிலாக மலிவான இந்த போதைப் பொருளை பயன்படுத்துகின்றனர் என்று சமீபத்திய ஆய்வு நிரூபித்துள்ளதாக பேராசிரியர் குறிபிப்பிட்டுள்ளார்.

“மதனா மோதகாவை உட்கொள்ளும் ஒருவரின் மன நிலையை கடுமையாக பாதிக்கும். ஏனெனில் அதில் வலுவான போதை உள்ளது. அது போன்றவற்றுக்கு அடிமையாகின்றவர்களுக்கு மருத்துவ வசதியுடன் கூடிய புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும்” எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த போதைப்பொருட்களின் பயன்பாடு மற்றும் அது கிடைக்கும் இடங்கள் போன்ற விவரங்கள், இளம் தலைமுறையினரை குறிவைத்து சமூக ஊடகங்கள் மூலம் பரவலாக பரப்பப்படுகிறது எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இந்த மதன மோதக போதைப் பொருட்களைப் பயன்பாடு மற்றும் பரவுதலுக்கு எதிராக சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றும், குறைந்த விலையில் இது கிடைப்பதால் இளைஞர்களுக்கு எளிதாகப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் பேராசிரியர் ஞானதாஸ பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்