தம்மிக, பவித்ரா அமைச்சரகளாகின்றனர்

🕔 June 11, 2022

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட வர்த்தக அதிபர் தம்மிக்க பெரேரா விரைவில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்படுவார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

பசில் ராஜபக்\ – நாடாளுமன்ற உறுப்புரிமையை ராஜினாமா செய்ததன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, தம்மிக பெரேரா நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டது.

இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று இரண்டு அமைச்சுக்களை உருவாக்கினர்.தொழில்நுட்பம், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் ஆகிய அமைச்சுக்களே உருவாக்கப்பட்டன. இவை இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதன்படி தம்மிக பெரேரா தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும், பொதுஜன பெரமுனவின் ரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி – பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராகவும் நியமிக்கப்படவுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் பதவியேற்பார்கள் என உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்