நான்கு பேரைக் கொண்ட குடும்பத்துக்கு, தற்போதைய நிலையில் எவ்வளவு வருமானம் தேவை: ஹரினி அமரசூரிய எம்.பி நாடாளுமன்றில் விளக்கினார்

🕔 June 9, 2022

திகரித்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடு செய்வதற்கு 04 பேரைக் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு 64 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் ரூபா வரையிலான வருமானம் தேவைப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மொத்த மக்கள் தொகையில் சுமார் 60 முதல் 65 வீதமானோர், மேற்கூறப்பட்ட வருமானத்தை ஈட்டவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத மட்டத்தில் இருப்பதாகவும் அது சமூகத்தின் அனைத்து வகுப்பினரையும் பாதித்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

“நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு மாத வருமானம் 64,000 ரூபா முதல் 70,000 ரூபா வரையில், அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய தேவைப்படுகிறது.

இந்த தொகை்குள் இறைச்சி, முட்டை மற்றும் பால் போன்றவற்றுக்கான செலவு உள்ளடக்கப்படவில்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போது அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் பல நெருக்கடிகளால் வறுமையில் வாடுவோர், வேலையில்லாதோர் மற்றும் வேலையில் இருப்பவர்கள் என, அனைவரும் சமமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்