“பிரதமராக என்னை, ஜனாதிபதி பதவியேற்கச் சொன்னார்”: நாடாளுமன்றில் பொன்சேகா வெளியிட்ட தகவல்

🕔 June 8, 2022

கிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியிலிருந்ரு ராஜினாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவியை ஏற்குமாறு ஜனாதிபதி தம்மிடம் கோரிக்கை விடுத்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நோக்கி உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு பதவி வழங்குவதற்கு மூன்று மணித்தியாலங்களுக்கு முன்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தன்னைத் தொடர்பு கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா கூறினார்.

“நீங்கள் பிரதமராகப் பதவியேற்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன், ஜனாதிபதி என்னைத் தொடர்பு கொண்டார். உடனடியாக பதவியை ஏற்று பிரதமராக பதவியேற்குமாறு ஜனாதிபதி என்னிடம் கூறினார். ரணில் விக்கிரமசிங்க, இப்போது அந்த நாற்காலியில் அமர்ந்ததற்காக நீங்கள் எனக்குக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

சில நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி இணங்குவதோடு, தனது கட்சியும் தீர்மானத்துக்கு ஆதரவளித்தால் மாத்திரமே தான் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்வதாகவும் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக பொன்சேகா கூறினார்.

“நான் உங்களுக்கு வழி விட்டதன் காரணமாகவே இன்று நீங்கள் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்துள்ளீர்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்” எனவும் அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நோக்கி தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்