எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் விசாரிக்க அழைக்குமாறு பணிப்பு

🕔 June 6, 2022

ரிவாயு விலையை அதிகரித்தமை குறித்து விசாரிப்பதற்காக லாஃப்ஸ் நிறுவனத்தை அழைக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து எரிவாயு , பால்மா மற்றும் சீமெந்து ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

லாஃப்ஸ் எரிவாயு 12.5 கிலோகிராம் கொள்கலன் ஒன்று 6,850 ரூபாவாகவும், 5 கிலோகிராம் 2,740 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனவே, எரிவாயு விலையை உயர்த்துவதற்கு முன்னர் நுகர்வோர் விவகார அதிகார சபையுடன் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தேவைக்கு மேலதிகமாக உணவுப்பொருட்களை சேமித்து வைக்கக் கூடாது எனவும், நுகர்வோர் தேவையற்ற சேகரிப்புகளை மேற்கொண்டால் அது சந்தையின் இயல்பு நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்