நைஜீரியாவில் தேவாலய வழிபாட்டின் போது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 50 பேர் பலி

🕔 June 6, 2022

நைஜீரியாவின் தென்மேற்கு ஓண்டோ மாநிலத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடைபெற்ற போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பல குழந்தைகள் உட்பட குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.

இதன் போது குண்டுகளையும் தாக்குதல்தாரிகள் வெடிக்கச் செய்துள்ளனர்.

ஞாயிறு வழிபாடுகளுக்காக மக்கள் திரண்டிருந்த போது, இந்த பயங்கரவாத கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களில் ஏராளமானோர் குழந்தைகளாவர்.

உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கையை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

Comments