தொலைபேசி, டேட்டா கட்டணங்கள் இன்றிரவு அதிகரிக்கின்றன

🕔 June 3, 2022

தொலைத்தொடர்பு வரி – இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்போதுள்ள 11.25% இலிருந்து 15% வரை அதிகரிக்கப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அரசாங்க வருவாயை அதிகரிக்கும் வகையில் குறித்த வரி அதிகரிக்கப்படும் என பிரதமர் அலுவலகம் முன்னதாக அறிவித்திருந்தது.

கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குநர்கள் நாளை முதல் மாதாந்த இணைப்புக் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அதே நேரத்தில் ‘ப்ரீ பெய்ட்’ (Pre paid) பயனர்கள், அவர்கள் ‘ரீலோட்’ செய்யும் தொகைக்கு – குறைந்த அளவிலான டேட்டா மற்றும் அழைப்பு நேரங்களைப் பெறுவார்கள்.

பெறுமதி சேர வரி (வெற்) 8% லிருந்து 12% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதால் கையடக்க தொலைபேசி கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும்.

Comments