மருந்துப் பொருள் கொள்வனவுக்காக 1.8 பில்லியன் ரூபாவை, கொவிட் நிதியத்திலிருந்து வழங்க ஜனாதிபதி உத்தரவு

🕔 June 3, 2022

த்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக கொவிட் நிவாரண நிதியிலிருந்து 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

சுகாதாரத் துறை சார் அவசர விடயங்கள் தொடர்பில் இன்று கோட்டையிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

கொவிட் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அரசுக்கு நிதி கிடைக்கப்பெற்றதாகவும், தற்போது கொவிட் தொற்றின் பரவல் குறைவடைந்துள்ள நிலையில், அந்த நிதியில் ஒருதொகையை இவ்வாறு அத்தியாவசிய மருந்து கொள்வனவுக்காக செலவிடுமாறும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்