துருக்கி என்றொரு நாடு, உலகில் இனி இல்லை

🕔 June 2, 2022

‘துருக்கி’ (Turkey) நாட்டின் பெயர் ‘துர்கியே’ (Türkiye) என மாற்றப்பட்டுள்ளது.

துருக்கி விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் சபை, இந்தப் பெயர் மாற்றத்தை செய்துள்ளது.

துருக்கிய வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லு, கடந்த புதன்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அனுப்பிய கடிதத்தில் ‘துருக்கி’ என்பதற்குப் பதிலாக ‘துர்க்கியே’ என, அனைத்து விவகாரங்களுக்கும் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்திருந்ததாக, ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

கடிதம் கிடைத்த தருணத்திலிருந்து நாட்டின் பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்ததாகவும், ஐ.நா செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எதுர்கான் ஒரு குறிப்பாணையை வெளியிட்டு, ஒவ்வொரு மொழியிலும் நாட்டை விவரிக்க ‘துர்க்கியே’ எனப் பயன்படுத்துமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து, டிசம்பர் மாதம் துருக்கி தனது சர்வதேச அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ பெயரை ஆங்கிலத்தில் Türkiye ( துர்க்கியே) என மாற்றுவதற்கான நடவடிக்கையைத் தொடங்கியது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்