‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நீடிப்பு

🕔 June 1, 2022

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலத்தை மேலும் மூன்று வாரங்கள் நீடிப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் மே 27ஆம் திகதி நிறைவடைந்தது.

இருந்தபோதிலம் இந்த செயலணியின் பொறுப்புகள் மற்றும் பணிகளை முடிவுறுத்துவதற்காக இதன் பதவிக் காலத்தை மேலும் மூன்று வாரங்கள் நீடிப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

2021 மார்ச் 26ஆம் திகதி ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டது.

தொடர்பான செய்தி: ஒரே நாடு ஒரே சட்டம்; மூன்றாவது முஸ்லிம் உறுப்பினரும் பதவி விலகினார்: என்ன சொல்கிறார் ஞானசார தேரர்?

Comments