புதிய அறிவிப்பு: மாதாந்தம் ஒன்றரை லட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுவோர் வரி செலுத்த வேண்டும்

🕔 June 1, 2022

நாட்டின் தனி நபர் வருமான வரியைச் செலுத்துவதற்கான வருடாந்த வருமானம் 1.8 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 03 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை வருடாந்த வருமானமாகப் பெறுகின்றவர்களே வருமான வரியைச் செலுத்தும் நிலை இருந்தது.

அதாவது முன்னர் மாதாந்தம் 2.5 லட்சம் ரூபாவை வருமானமாகப் பெறுவோர் வருமான வரியினைச் செலுத்தும் நிலையிலிருந்தது. தற்போதைய திருத்தத்தின் அடிப்படையில் மாதாந்தம் 1.5 லட்சம் ரூபாவை வருமானமாகப் பெறுவோர் வருமான வரியினைச் செலுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வரும் முன்னர், வருடாந்தம் 05 லட்சம் ரூபாவுக்கு மேல் வருமானமாகப் பெறுவோர் வருமான வரியை செலுத்தும் நிலை இருந்தது.

ஆனால், கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவான பின்னர், வருடாந்தம் 30 லட்சம் ரூபாவுக்கு மேல் வருமானத்தைப் பெறுவோரே வருமான வரியை செலுத்த வேண்டுமென திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் நாட்டின் பெருந்தொகை வருமானம் இழக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்