ஹஜ் கடமைக்காக இவ்வருடம் இலங்கையிலிருந்து யாத்திரிகர்களை அனுப்பாதிருக்கத் தீர்மானம்

🕔 May 31, 2022

ஜ் கடமைகளுக்காக இம்முறை இலங்கையிலிருந்து மக்காவுக்கு யாத்திரிகர்களை அனுப்பாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் இப்ராஹிம் அன்சார் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஹஜ் யாத்திரைக்காக இவ்வருடம் சவூதி அரேபியா, இலங்கைக்கு 1585 இடங்களை ஒதுக்கியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக ஹஜ் கடமையின் நிமித்தம் இலங்கையிலிருந்து எவரும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்