21ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை: சரத் வீரசேகர தெரிவிப்பு

🕔 May 31, 2022

னாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21வது திருத்தத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர (ஓய்வு) அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

தான் 19வது திருத்தத்துக்கு ஆதரவளிக்கவில்லை எனவும், 21வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை எனவும் வீரசேகர கூறியுள்ளார்.

மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கு உடன்பட முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

19ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போது, அதற்கு நாடாளுமன்றில் சரத் வீரகேசர மட்டுமே எதிராக வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்