தேசபந்து தென்னகோன் பயன்படுத்திய தொலைபேசி, சிஐடி யிடம் ஒப்படைப்பு

🕔 May 31, 2022

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பயன்படுத்திய கைத்தொலைபேசியை குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திடம் (சிஐடி) ஒப்படைத்துள்ளார்.

குறித்த மாதத்தில் அவரது தொலைபேசி பதிவுகளை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபரினால் விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமையவே இது இடம்பெற்றுள்ளது.

கடந்த 09ஆம் திகதி அலறி மாளிகை மற்றும் கோட்டா கோ கம பகுதிகளில் அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது, அரசாங்க தரப்பு ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலின் போது, அந்த இடத்தில் காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவுடன் அப்போது மேல் மாகாணத்துக்குப் பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டமையை அடுத்து, அவரை கைது செய்யுமாறு கோரிக்கைகள் எழுந்தன.

தற்போது தேசபந்து தென்னகோன் 14 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்