ராணுவத் தளபதியானார் விக்கும் லியனகே: ஷவேந்திர சில்வா பாதுகாப்பு படைகளின் தலைமை பிரதானியாக நியமனம்

🕔 May 31, 2022

பாதுகாப்பு படைகளின் தலைமை பிரதானியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, புதிய ராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே பதவி வழங்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேயிடம் இதற்கான கடிதத்தை இன்று (31) ஜனாதிபதி கையளித்துள்ளார்.

ராணுவத் தளபதியாக நாளை (01) விக்கும் லியனகே பதவியேற்கவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்