தேசபந்து தென்னகோன்: சொந்த விடுமுறையில் சென்றார்

🕔 May 30, 2022

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (30) முதல் 14 நாட்கள் விடுமுறையில் சென்றுள்ளார்.

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக, பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபர் விடுத்துள்ள சுற்றறிக்கையின்படி, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தென்னகோன் விடுமுறையில் சென்றுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொண்டர்களால் மே 09ஆம் திகதி கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, தென்னகோன் சம்பந்தப்பட்டமை தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளதால், தேசபந்து தென்னகோனை இடமாற்றம் செய்யுமாறு சட்டமா அதிபர் முதலில் அறிவுறுத்தியிருந்தார்.

இருந்தபோதிலும் இடமாற்றம் நடைமுறைப்படுத்தப்படாததால், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் 14 நாட்களுக்கு விடுமுறையில் எடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்