கோட்டா விலகினால், பசில்தான் அடுத்த ஜனாதிபதி: நீதியமைச்சர் விஜேதாஸ விளக்கம்

🕔 May 29, 2022

னாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால், பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாக வருவார் என, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“அவர்கள் ஜனாதிபதியை ராஜினாமா செய்யச் சொல்கிறார்கள். அந்த பிரச்சனை தீர்ந்தால் அடுத்த பிரச்சனை என்னவாக இருக்கும்? அவர் ராஜினாமா செய்தால் என்ன நடக்கும்? இன்று நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுன கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது.

ஜனாதிபதி ஒருவர் ராஜிநாமா செய்தால், அடுத்த ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்”என்று அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்துவது பசில் ராஜபக்ஷதான் என்றும், தற்போதைய ஜனாதிபதி பதவி விலகினால் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாக முடியும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்