நிந்தவூர் பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள், தமது மாதாந்தக் கொடுப்பனவுகளை அரசுக்கு வழங்க தீர்மானம்

🕔 May 27, 2022

– பாறுக் ஷிஹான் –

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணப்படும் வரை, தமது சபையின் பதவிக் காலம் முழுவதும்,  தங்களுக்கு வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவுகளை, அரசுக்கு ஒரு நிவாரணமாக  வழங்குவதற்கு நிந்தவூர் பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

நேற்று நடைபெற்ற மாதாந்தக் கூட்டத்தின் போது, ஏகமனதாக இந்த முடிவு எட்டப்பட்டதாக நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தெரிவித்தார்.

“இந்த விடயத்தை பிரதமருக்கு தெரியப்படுத்த விரும்புகின்றோம். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தீர்க்கப்படும் வரை, ஏனைய  அனைத்து உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும், தங்களின் கொடுப்பனவுகளையும் எம்மை முன்னுதாரணமாக கொண்டு அரசுக்கு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்” என இந்தப் பிரேரணையை முன்வைத்த தவிசாளர் தாஹிர் வேண்டுகோள் விடுத்தார்.

சபையின் தவிசாளர் உட்பட  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் 06 உறுப்பினர்கள், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 06 உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரும் சபையின் உப தவிசாளருமான வை.எல். சுலைமாலெப்பை ஆகியோர் இணைந்து,  தவிசாளரின் பிரேரணைக்கு ஏகமனதாக ஆதரவினை தெரிவித்து, தத்தமது மாதாந்த கொடுப்பனவினை நாட்டின் பொருளாதார பிரச்சினை தீர்க்கப்படும் வரை வழங்குவதாக தீர்மானம் மேற்கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்