
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என அமைச்சரும் அரசாங்கத்தின் பிரதம கொறடாவுமான ஜோன்ஸ்டன் பெனாண்டோ இன்று (06) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அமைச்சர், நாட்டின் 6.9 மில்லியன் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்துள்ளனர் என கூறினார்.
“பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் எந்தவொரு சூழ்நிலையிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டார் என நாம் கூறுகின்றோம்” என அமைச்சர் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய தேசிய நெருக்கடியை அரசாங்கம் எதிர்கொள்ளும் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.



