
முன்னாள் ராஜாங்க அமைச்சரும் மஹிந்த ராஜபக்ஷவின் உறவினருமான நிருபமா ராஜபக்ஷ நேற்று (05) இரவு நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு 10.25 மணியளவில் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானமான EK-655 இல் நிருபமா ராஜபக்ஷ டுபாய் பயணமானதாக கூறப்படுகிறது.
நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் ஆகியோரின் பெயர்களும் பெண்டோரா பேப்பர்ஸ்களில் இடம்பெற்றுள்ளன. சில காலங்களுக்கு முன்னர் இவ்விடயம் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வெளிநாட்டு வங்கிகளில் வைப்பிலிடப்பட்ட 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உறுதிப்படுத்தப்படாத சொத்துக்கள் குறித்து, இலங்கையின் சட்டப்பிரிவினால் விசாரணை நடத்தப்பட்ட போதிலும், இதுவரை எந்த முடிவும் வெளியாகவில்லை.
இதேவேளைடு, அரசாங்கத்தின் பெருமளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி கொழும்பில் உள்ள சொகுசு விடுதிகளில் குடும்பத்துடன் தங்கியுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த சில நாட்களாக ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், சில வீடுகளைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.



