
நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலைமையை இன்று (05) நள்ளிரவு முதல் வாபஸ் பெறுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
வர்த்தமானியின் ஊடாக அவர் இதனை தெரியப்படுத்தியுள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அவசர கால நிலைமையை திரும்பப் பெறுவதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த முதலாம் திகதி, நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



