போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு: அமைச்சர் திலும் தகவல்

🕔 March 15, 2022

லங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ் கட்டணம் 15 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறைந்த பஸ் கட்டணம் 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையை அடுத்து, பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நேற்று (14) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சொகுசு, அரைச்சொகுசு மற்றும் அதிவேக நெடுஞ்சாலை உள்ளிட்ட சகல பஸ்களுக்குமான கட்டணங்களும் அதிகரிக்கப்படுகின்றன.

புதிய கட்டணம் தொடர்பான அறிவித்தல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

அத்துடன் ரயில் கட்டணத்தையும் எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருக்கிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்